Tuesday, October 16, 2018

மாநில அரசின் அறிவுரையை ஏற்க மறுத்து தொழிலாளர்களை பழிவாங்கும் யமஹா, எம்எஸ்ஐ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், எல்பிஎப் சார்பில் நடராஜன், ஏஐடியுசி சார்பில் சம்பத், ஏஐசிசிடியு சார்பில் ஏ.எஸ்.குமார், எம்எல்எப் சார்பில் அந்திரிதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.




இந்திய நாட்டுச் சட்டங்களை மதிக்காத பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சலுகைகளை ரத்து செய்ய வேண்டுமென அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் செயல்பட்டுவரும் யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு, க்ரெவுன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடர் வேலை நிறுத்தப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு அறிவுரைகளைத் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த அறிவுரைகளை ஏற்காத யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து தொழிலாளர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் செவ்வாயன்று (அக்.16) காஞ்சிபுரம் காந்தி சாலையிலுள்ள பெரியார் தூண் அருகில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலும் தமிழக அரசின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட்டு வரும் யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு,க்ரெவுன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்ய வேண்டும், டாங்கஸன், அனிவல், கனிஷ்கோல்டு, பாக்ஸ்கான் ஆகிய ஆலைகள் மூடப்பட்டதால் வேலையிழந்துள்ள தொழிலாளர் களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்ய வேண்டும், தொழிற்சாலை ஆய்வுத் துறையை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார், எல்பிஎப் மாவட்டத் தலைவர்கள் செ.சுந்தரவரதன், கே.ஏ.இளங்கோவன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சொ.ரணியப்பன், மாவட்ட நிர்வாகிகள் எ.ஜஹாங்கீர், ஏ.மூர்த்தி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் கே.ஆபத்சகாயம், மாவட்ட பொருளாளர் டி.தேவராசன், மாவட்டத் தலைவர் கே.விஜயன், ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராஜகுரு, கு.முருகன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Sunday, October 14, 2018

Uniform Tender அமலக்க வேண்டும்

24 வது மாநில கவுன்சில் கூட்டதில்
தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறைக்கு Uniform Tender அமலக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்று , இது தொடர்பாக தனியாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.